/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களில் 11 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை

ADDED : ஜூலை 02, 2024 04:43 AM

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 11 பேரை கோர்ட் அனுமதியுடன் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இறந்தனர். 164 பேர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து சாராயம் விற்றவர்கள், மெத்தனால் சப்ளையர்கள் என 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களில் முக்கிய குற்றவாளிகள் 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த 28ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் தேவச்சந்திரன் ஆஜராகினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், கள்ளச்சாரய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கருணாபுரம் கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ்,50; அவரது மனைவி விஜயா,44; சேஷசமுத்திரம் சின்னதுரை,36; விரியூர் ஜோசப்,40; சூ.பாலப்பட்டு கதிரவன்,30; கண்ணன்,40; மடுகரை மாதேஷ்,19; சென்னை சிவக்குமார்,39; பன்ஷிலால்,32; கவுதம்சந்த்,50; சக்திவேல் ஆகிய 11 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியும், அவர்களை நாளை 3ம் தேதி மாலை 3:00 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
அதனையொட்டி, 11 பேரையும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.