/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 17,644 பேர் பங்கேற்பு: 502 பேர் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 17,644 பேர் பங்கேற்பு: 502 பேர் 'ஆப்சென்ட்'
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 17,644 பேர் பங்கேற்பு: 502 பேர் 'ஆப்சென்ட்'
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 17,644 பேர் பங்கேற்பு: 502 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 06, 2025 02:09 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வில் 17,644 மாணவ- மாணவியர் பங்கேற்ற நிலையில், 502 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 74 தேர்வு மையங்களில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது.
இதில் பங்கேற்க அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 8,500 மாணவர்கள், 8,974 மாணவிகள் என 17,474 பேர் விண்ணப்பித்தனர்.
மேலும், தனித்தேர்வர்கள், கடந்தாண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத, 428 ஆண்கள், 244 பெண்கள் என 672 பேர் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்து தேர்வை எதிர் நோக்கி இருந்தனர்.
மொத்தம், 18,146 பேர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று காலை தேர்வு துவங்கியது. இதில், பிளஸ் 1 பயிலும் 8,314 மாணவர்கள், 8,869 மாணவிகள் என மொத்தம் 17,183 பேர் தேர்வெழுதினர்.
இந்த தேர்வில், 186 மாணவர்கள், 105 மாணவிகள் என 291 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. தனித்தேர்வர் மற்றும் இரண்டாவது முறை தேர்வு எழுதுபவர்களில் 285 ஆண்கள், 176 பெண்கள் என 461 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். இதில், 143 ஆண்கள், 68 பெண்கள் என 211 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
ஒட்டு மொத்தமாக தேர்வில், 502 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை, இயக்குநர் நாகராஜ முருகன், ரிஷிவந்தியம் அரசு பள்ளியில் நடந்த தேர்வை சி.இ.ஓ., கார்த்திகா ஆய்வு செய்தனர்.