/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நகை பாலிஷ் போடுவதாக மோசடி பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது
/
நகை பாலிஷ் போடுவதாக மோசடி பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது
நகை பாலிஷ் போடுவதாக மோசடி பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது
நகை பாலிஷ் போடுவதாக மோசடி பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது
ADDED : பிப் 22, 2025 09:26 PM

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே நகை பாலிஷ் போடுவதாக மோசடி செய்த பீகார் மாநில வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ஆருர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி மகாலட்சுமி,30; இவரிடம் நேற்று காலை, வடமாநில வாலிபர்கள் இருவர், நகை பாலிஷ் போட்டுத் தருவதாக கூறினர்.
இதனை நம்பிய மகாலட்சுமி தனது கொலுசை கழற்றிக் கொடுத்தார். கொலுசை, நன்றாக பாலீஷ் போட்டு தந்ததை தொடர்ந்து, தான் அணிந்திருந்த 3 சவரன் செயினை கழற்றி கொடுத்தார். சற்று நேரம் கழித்து செயினை பல துண்டுகளாக்கி கொடுத்தனர். சந்தேகமடைந்த மகாலட்சுமி இதுகுறித்து கேட்டபோது, இரு வாலிபர்களும் தப்பி ஓட முயன்றனர்.
மகாலட்சுமி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்ததில், பாலீஷ் போடுவதாக கூறி செயினில் இருந்து 6 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்திருப்பது தெரியவந்தது. உடன் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று, இருவரையும் மீட்டு விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சோனுகுமார்,25; சந்தன்குமார்,24; என்பது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, இருவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.