/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின் கம்பியில் சிக்கி 2 மாடுகள் பலி
/
மின் கம்பியில் சிக்கி 2 மாடுகள் பலி
ADDED : ஜூன் 15, 2024 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி 2 பசு மாடுகள் இறந்தன.
திருக்கோவிலுார் அடுத்த பெரியமணியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 40; கூலித் தொழிலாளியான இவர், நேற்று காலை தனது பசு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது, வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இரு மாடுகளும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தன.
மாடுகளை பிடித்து சென்ற ராமசாமி, வரப்பு அருகே விழுந்து கிடந்த தேங்காயை எடுக்க சென்றதால், உயிர் தப்பினார்.
இதுகுறித்து திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.