/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
2 சிறுமிகள் மாயம் போலீஸ் விசாரணை
/
2 சிறுமிகள் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : மே 03, 2024 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்,- சங்கராபுரம் அருகே காணாமல் போன 2 சிறுமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த வளையாம்பட்டைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் புஷ்பா, 16; ஒன்பதாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
இவரை நேற்று அதிகாலை முதல் காணவில்லை.
மற்றொரு சிறுமி மாயம்
புதுபாலப்பட்டைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் விஜயதர்ஷனி, 17; இவர் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார்.
இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தனித்தனியே அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.