/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
/
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
ADDED : செப் 02, 2024 09:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் பைக்கில் வந்த 2 பேரை சோதனை செய்ததில் மது பாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் வினோத், 21; கணேசன் மகன் பாண்டியன், 21; என தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.