ADDED : ஏப் 30, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அப்பகுதியில் சாராயம் விற்ற ராஜேந்திரன் மனைவி எலகாந்தம், 55; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்.
இதேபோல் சப் இன்ஸ்பெக்டர் ராஜா சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் சாராயம் விற்ற ரமேஷ், 45; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்.