/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோவிலில் திருட முயன்ற 2 பேர் கைது
/
கோவிலில் திருட முயன்ற 2 பேர் கைது
ADDED : மே 30, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கோவிலில் திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி சாலையில் ஸ்ரீஅழகத்தால் அம்மன் பெரியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் 2 பேர் திருட முயன்றனர்.
சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், 2 பேரையும் பிடித்து சின்னசேலம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கனியாமூர் காமராஜர் நகர் கலியன் மகன் சீனுவாசன், 50; சின்னசேலம் திரு.வி.க.,நகர் குணசேகர் சசிக்குமார், 23; என்பதும், தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.