/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடிபோதையில் போலீசிடம் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
/
குடிபோதையில் போலீசிடம் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
குடிபோதையில் போலீசிடம் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
குடிபோதையில் போலீசிடம் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
ADDED : ஆக 02, 2024 11:34 PM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் போலீசார் வாகன சோதனையின் போது குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார், போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் அரசு மருத்துவமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே பைக்கில் மூன்று பேர் வந்த பைக்கை நிறுத்தினர். அப்போது ஒருவர் தப்பியோடினார்.
பிடிபட்ட இருவரிடம் விசாரித்ததில், பெருமாள் நாயக்கர் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ், 22; சைலோம் முருகன் மகன் மாதேஸ்வரன், 22; என தெரிந்தது.
இருவரும் குடிபோதையில் போலீசாரை திட்டி, மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து விக்னேஷ், மாதேஸ்வரன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், தப்பியோடிய வினோத் என்பவரை தேடி வருகின்றனர்.