/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
/
20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
ADDED : மார் 03, 2025 07:10 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும், 20 கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யலாம் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் முதற்கட்டமாக , திம்மலை, சிறுநாகலுார், சிறுவங்கூர், வடபூண்டி, சாத்தனுார் உள்ளிட்ட, 20 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன.
இங்கு விவசாயிகள், 17 சதவிதம் ஈரப்பதத்திற்குள் உள்ள நெல்லை, சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2450; பொது ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2405; எனும் மதிப்பில் விற்பனை செய்யலாம்.
விவசாயிகள் தங்கள் மொபைல் எண், ஆதார் எண், வங்கி கணக்கு மற்றும் வி.ஏ.ஓ., வழங்கிய பட்டா, சிட்டா, அடங்கல் விபரங்களை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.நெல் மூட்டை தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு உடனடியாக செலுத்தப்படும். விவசாயிகள் இடைத்தரகர் யாரையும் அணுகாமல் நேரடியாக நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயனடைய வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.