/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
10ம் வகுப்பு தமிழ் தேர்வு 20,133 பேர் பங்கேற்பு; மாவட்டத்தில் 606 பேர் 'ஆப்சென்ட்'
/
10ம் வகுப்பு தமிழ் தேர்வு 20,133 பேர் பங்கேற்பு; மாவட்டத்தில் 606 பேர் 'ஆப்சென்ட்'
10ம் வகுப்பு தமிழ் தேர்வு 20,133 பேர் பங்கேற்பு; மாவட்டத்தில் 606 பேர் 'ஆப்சென்ட்'
10ம் வகுப்பு தமிழ் தேர்வு 20,133 பேர் பங்கேற்பு; மாவட்டத்தில் 606 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 27, 2024 07:38 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று துவங்கிய 10ம் வகுப்பு வகுப்பு பொது தேர்வில் 91 தேர்வு மையங்களில் 20,133 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். 606 பேர் தேர்வுக்கு வரவில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 233 பள்ளிகளில் நேற்று 10ம் வகுப்பு தேர்வு துவங்கியது. தேர்வு வரும் ஏப்., 8 ம் தேதி தேதி வரை நடக்கிறது.
இதற்காக 91 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 10,771 மாணவர்கள், 9,976 மாணவிகள் என மொத்தம் 20,747 பேர் தேர்வு எழுத கல்வி துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று நடந்த தமிழ் மொழிப்பாட தேர்வில் 10,376 மாணவர்கள், 9,757 மாணவிகள் என மொத்தம் 20,133 பேர் எழுதினர்.
இதில் தமிழ் தேர்வு எழுதுவதிலிருந்து 8 பேர் விலக்கு பெற்றனர். தேர்வுக்கு 390 மாணவர்கள், 216 மாணவிகள் என 606 பேர் வரவில்லை.
அதேபோல், தனி தேர்வர்களுக்காக 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இதில் 545 பேரில் 498 பேர் தேர்வு எழுதினர். 46 பேர் எழுதவில்லை.
பத்தாம் வகுப்பு பொது தேர்வையொட்டி தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி, தீயணைப்பு பாதுகாப்பு, தேர்வு மைய வளாக துாய்மை, ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சி.இ.ஓ.,முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களை கண்காணித்தனர். தேர்வுக்கு பின் மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தம் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

