/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வெறிநாய் கடித்து 22 பேர் பாதிப்பு கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு
/
வெறிநாய் கடித்து 22 பேர் பாதிப்பு கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு
வெறிநாய் கடித்து 22 பேர் பாதிப்பு கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு
வெறிநாய் கடித்து 22 பேர் பாதிப்பு கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு
ADDED : ஆக 17, 2024 03:31 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் மாவட்டத்தை சேர்ந்த 22 பேர் வெறிநாய் கடித்து காயமடைந்தனர்.
சின்னசேலம் அடுத்த வி.மாமந்துாரில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு தெருகூத்து நடந்தது.
அப்போது இரவு 9 மணிக்கு வெறிபிடித்த தெருநாய் ஒன்று அதே ஊரைச் சேர்ந்த சித்ரா,20; லட்சுமணன்,13; பாப்பா,60, லட்சுமி,65; அஜய்.15, சின்னதுரை,30; உள்ளிட்ட 11 பேரை கடித்துள்ளது.
உடன் அனைவரையும் நைனார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து செல்லப்பட்டு தடுப்பூசி போட்டு, 6 பேர் மேல்சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து வி.மாமந்துார் அருகே உள்ள கடலுார் மாவட்டம் பனையந்துார் கிராமத்தில் புகுந்த வெறிநாய் அங்கு காலை நேரத்தில் தெருவில் இருந்த யாமினி,8; யோகேஸ்வரி,7; ஹரிஷ்,7, புகர்ஷ்,10; காவ்யா,8; வெங்கடேசஷ்,38; அழகப்பன்,80; வல்லரசு,23; முத்தழம்மாள்,75; ரகிமாபிவி,50; உள்ளிட்ட 11 பேரை கடித்துள்ளது.
உடன் அனைவரையும் மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தடுப்பூசி போட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து அறிந்த மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, துணை சேர்மன் அன்புமணிமாறன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களை கடித்த வெறிநாயை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

