/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை துவக்கம்
/
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை துவக்கம்
ADDED : மார் 22, 2024 10:18 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.
எஸ்.பி., சமய்சிங் மீனா செய்திக்குறிப்பு:
வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி, மாவட்ட காவல்துறை சார்பாக எஸ்.பி., அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறை, ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கும். இதற்கான பிரதயேக உதவி வாட்ஸ் ஆப் எண் 98845 10097 வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவரும் எந்த நேரத்திலும் இந்த உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு, மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறல்கள் குறித்த தகவல்களை அளிக்கலாம்.
மேலும் தேர்தல் தொடர்பாக வதந்தி மற்றும் தவறான தகவல்களை சமூக வலைதளங்கள், ஊடகங்களில் பரப்புவர்கள் குறித்து தகவல்களையும் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

