/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
2.81 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெறுவோர்... ரூ. 15.87 கோடிக்கு மருத்துவ சிகிச்சை
/
2.81 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெறுவோர்... ரூ. 15.87 கோடிக்கு மருத்துவ சிகிச்சை
2.81 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெறுவோர்... ரூ. 15.87 கோடிக்கு மருத்துவ சிகிச்சை
2.81 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெறுவோர்... ரூ. 15.87 கோடிக்கு மருத்துவ சிகிச்சை
ADDED : மே 24, 2024 06:05 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், 2 லட்சத்து 81 ஆயிரத்து 945 குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் ஏழை, எளிய பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், அரசு பஸ்களில் மகளிர் கட்டணமில்லா பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்ட 5 திட்டங்களுக்கு கையொப்பமிட்டார்.
இதில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 945 குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை செலுத்தப்படுகிறது. அரசு பஸ்சில் கட்டணமில்லா பஸ் பயணம் திட்டத்தில் இதுவரை 6 கோடியே 90 லட்சத்து 43 ஆயிரத்து 458 மகளிர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணித்து பயனடைந்துள்ளனர்.
அதேபோல், மாவட்டத்தில் 652 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 46 ஆயிரத்து 118 மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 17 ஆயிரத்து 790 பேருக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்து, மேற்படிப்புக்காக கல்லுாரியில் சேர்ந்த 3 ஆயிரத்து 169 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 53 ஆயிரத்து 394 பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனை செய்து மாத்திரை, மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும்-48 திட்டத்தின் கீழ், 24 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 15 கோடியே 87 லட்சத்து 36 ஆயிரத்து 477 ரூபாய் செலவில், 16 ஆயிரத்து 66 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சமூக மக்களை தொழில் முனைவோராக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 71 தொழில் முனைவோர்களுக்கு ரூ.4 கோடியே 45 லட்சத்து 80 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவலை கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.