ADDED : ஆக 25, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அருகே ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சங்கராபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ஆகியோர் சம்பவம் இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர்.
அதில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. உடன் அங்கிருந்த, பெண் புரோக்கர் தேவி, 36; அவரது தாய் ராஜம்மாள், 52; ஜெயராமன், 58; ஆகிய 3 பேரை கைது செய்து, 5 பெண்களை மீட்டனர்.