/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தகராறில் பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் 3 பேர் கைது
/
தகராறில் பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் 3 பேர் கைது
தகராறில் பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் 3 பேர் கைது
தகராறில் பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் 3 பேர் கைது
ADDED : ஏப் 22, 2024 06:27 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே அரசு விரைவு பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த குணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும், ஒலையனுார் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
அப்போது கோயம்புத்துாரில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற அரசு விரைவு பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
இது குறித்து அரசு விரைவு பஸ் டிரைவர் ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியை சேர்ந்த கேசவன், 42; கொடுத்த புகாரின் பேரில் குணமங்கலம் உதயா, 23; சரத்குமார், 26; பிரகாஷ், 23; ஸ்ரீதர், 37; ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து பிரகாஷ், ஸ்ரீதர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அதேபோல் குணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்களை தாக்கியதாக குணமங்கலம் அருண்குமார், 24; கொடுத்த புகாரின் பேரில் ஒலையனுார் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின், சதீஷ், 28; கருப்புசாமி ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிந்து சதீஷை கைது செய்தனர்.

