/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேனில் ரேஷன் அரிசி கடத்தல் சின்னசேலம் அருகே 3 பேர் கைது
/
வேனில் ரேஷன் அரிசி கடத்தல் சின்னசேலம் அருகே 3 பேர் கைது
வேனில் ரேஷன் அரிசி கடத்தல் சின்னசேலம் அருகே 3 பேர் கைது
வேனில் ரேஷன் அரிசி கடத்தல் சின்னசேலம் அருகே 3 பேர் கைது
ADDED : ஆக 15, 2024 04:43 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற 3 பேரை குடிமைப்பொருள் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஏட்டுகள் கண்ணன், திவ்யா, செல்வி ஆகியோர் சின்னசேலம் அடுத்த வி.கூட்ரோட்டில் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த டிஎன்30 பிடி7029 பதிவெண் கொண்ட மகேந்திரா பிக்அப் லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தலா 50 கிலோ வீதம் 36 மூட்டைகளில் 1,800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. உடன் வேனில் வந்தவர் தப்பிச் சென்று டிஎன்31 ஏவி8406 பதிவெண் கொண்ட மாருதி ஆம்னி காரில் ஏறி தப்பினர்.
போலீசார், ஆம்னி காரை விரட்டிச் சென்று, குரால் கிராமம் அருகே மடக்கி பிடித்தனர். விசாரணையில் தப்பி ஓடியவர் நாமக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி வேலுசாமி மகன் ராகுல்,24; என்பதும், ஆம்னி காரில் இருந்தவர்கள் நாமக்கல் மாவட்டம், கீழ்பாலப்பட்டு கோவிந்தராஜ் மகன் வினோத்,29; அனயாபுரம் வேலுசாமி மகன் பூபதி,28; என்பதும் தெரிந்தது.
மேலும், நெய்வேலி, பண்ருட்டி பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, அதை விற்பனை செய்ய நாமக்கல்லுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், 36 ரேஷன் அரிசி மூட்டைகள், லோடு வேன் மற்றும் ஆம்னி காரை பறிமுதல் செய்தனர்.