/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பறிமுதல் செய்த 3.800 கிலோ தங்கம்; ஆவணங்கள் சமர்பித்ததால் ஒப்படைப்பு

ADDED : மார் 23, 2024 06:25 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட 3.800 கிலோ தங்கம் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால் ஒப்படைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று காலை 10:00 மணியளவில், தச்சூர் பகுதி சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சத்யபிரகாஷ் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர். அதில், 3.800 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் சென்னை, பெரம்பூரிலிருந்து கேரளா மாநிலம் திருச்சூருக்கு, தனியார் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான நகைகளை ஏலம் விடுவதற்காக எடுத்துச் செல்வதாக தெரிவித்தனர்.
உரிய ஆணத்தை காண்பிக்காததால் நகைகளை பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமியிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகளின் தீவிர விசாரணைக்குப்பின், உரிய ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது.
அதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 3.800 கிலோ தங்க நகைகள் இரவு 7:00 மணிக்கு மேல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.