sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

டிரான்ஸ்பார்மர்களில் காயில் திருடிய 4 பேர் கைது

/

டிரான்ஸ்பார்மர்களில் காயில் திருடிய 4 பேர் கைது

டிரான்ஸ்பார்மர்களில் காயில் திருடிய 4 பேர் கைது

டிரான்ஸ்பார்மர்களில் காயில் திருடிய 4 பேர் கைது


ADDED : பிப் 22, 2025 09:42 PM

Google News

ADDED : பிப் 22, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டையில் பல இடங்களில் டிரான்ஸ்பார்மர்களில் காயில்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணியளவில் உளுந்துார்பேட்டை உழவர் சந்தை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், திருட்டுக்கு பயன்படுத்தும் பொருட்கள் இருந்ததால் ஆட்டோவில் வந்த 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், நெய்வேலி டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன், 43; வடக்குவெள்ளூர் பிரேம்குமார் மகன் சுதாகர், 25; மந்தாரக்குப்பம் ஆரோக்கியராஜ் மகன் அலெக்சாண்டர், 20; என தெரிய வந்தது.

மேலும் இவர்கள் 3 பேரும் வடக்குவெள்ளூரைச் சேர்ந்த பழனிசாமி, 47; என்பவருடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் டிரான்ஸ்பார்மர்களில் உள்ள காயில்களை திருடி வந்தது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து வெங்கட்ராமன், சுதாகர், அலெக்சாண்டர் ஆகியோரையும் 3 பேரும் கொடுத்த தகவலின் பேரில், உளுந்துார்பேட்டை அடுத்த எம்.எஸ்.தக்கா அருகே இருந்த பழனிசாமியையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஆட்டோ, பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us