தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கூட்டு கொள்ளையடிக்க திட்டம் ஆயுதங்களுடன் 4 பேர் கைது

கூட்டு கொள்ளையடிக்க திட்டம் ஆயுதங்களுடன் 4 பேர் கைது

கூட்டு கொள்ளையடிக்க திட்டம் ஆயுதங்களுடன் 4 பேர் கைது


ADDED : மார் 05, 2025 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2025 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் கூட்டுக் கொள்ளையடிக்க பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்ட அப்போது, மைலாம்பாறையில் ஆட்டோவில் சந்தேகப்படும்படி இருந்த நபர்களை பிடிக்க முயன்றபோது, தப்பியோடினர். போலீசார் அவர்களை துரத்திச் சென்றதில் 4 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பியோடினர்.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், சங்கராபுரம் பகுதிகளில் கூட்டுக் கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆட்டோவில் செல்ல காத்திருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, சங்கராபுரம் நாராயணன் மகன் ஆனந்தராசு, 44; கோவிந்தன் மகன் ராஜா, 27; சீர்காழி ராமலிங்கம் மகன் கார்த்திகேயன், 42; வடசேமபாளையம் உஸ்மான் அலி மகன் முகமது ரபிக், 36; ஆகிய 4 பேரை கைது செய்து வீச்சரிவாள், கத்தி, மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், தப்பியோடிய புதுச்சேரி, அரியாங்குப்பம் ராஜேஷ், வடசொரலுார் பன்னீர்செல்வம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us