sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

துணை தாசில்தார்கள் 4 பேர் பணியிட மாற்றம்

/

துணை தாசில்தார்கள் 4 பேர் பணியிட மாற்றம்

துணை தாசில்தார்கள் 4 பேர் பணியிட மாற்றம்

துணை தாசில்தார்கள் 4 பேர் பணியிட மாற்றம்


ADDED : பிப் 28, 2025 11:52 PM

Google News

ADDED : பிப் 28, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி,; மாவட்டத்தில் 4 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்தும், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் மூன்று பேர் துணை தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை தாசில்தார் நிலையில் உள்ள 4 பேரை பணியிட மாற்றம் செய்தும், முதுநிலை வருவாய் ஆய்வாளர் 3 பேர் துணை தாசில்தர்கள் நிலையான பதவி உயர்வு வழங்கி கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி உளுந்துார்பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி, கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், (இ-பிரிவு), கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (டி-பிரிவு) சுதாகர் உளுந்துார்பேட்டை மண்டல துணை தாசில்தாராகவும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (இ-பிரிவு) சண்முகம் வாணாபுரம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் (ஜி-பிரிவு) சிங்காரவேல் உளுந்துார்பேட்டை வழங்கல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக திருக்கோவிலுார் சப் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த சிட்டிபாபு கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (ஜி-பிரிவு), உளுந்துார்பேட்டை தாலுகா அலவலகத்தில் பணிபுரிந்த மாணிக்கம்மாள் கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும் (டி-பிரிவு), புவனேஸ்வரி திருக்கோவிலுார் வட்ட வழங்கல் அலுவலராகவும் நியமித்து துணை தாசில்தார் நிலைக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us