/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்: 6 பேர் காயம்
/
அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்: 6 பேர் காயம்
ADDED : பிப் 22, 2025 10:16 PM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து, 4 வாகனங்கள் மோதிய விபத்தில், 6 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு தனியார் சொகுசு பஸ் நேற்று முன்தினம் புறப்பட்டது.
நேற்று காலை, 3:45 மணிக்கு, உளுந்துார் பேட்டை அடுத்த பு. மாம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில் சென்ற போது, கட்டுப் பாட்டை இழந்து முன்னே சென்ற கார் மீது மோதியது.
தொடர்ந்து கார், முன் சென்ற வேன் மீதும், வேன் அதற்கு முன்பாக சென்ற அரசு பஸ் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது.
அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதியதில், வேனில் பயணம் செய்த காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதியைச் சேர்ந்த டிரைவர் முருகன், 48; சந்தோஷ், 26; பிரசன்னா, 32; செல்வகுமார், 40; சுகந்தன், 39; சண்முகம், 45; ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர்.
உடன் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். மற்ற வாகனங்களில் சென்றவர்கள் காயமின்றி தப்பினர்.
இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

