/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல் : 5 பேர் காயம்
/
உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல் : 5 பேர் காயம்
உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல் : 5 பேர் காயம்
உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல் : 5 பேர் காயம்
ADDED : செப் 17, 2024 06:24 AM

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து 5 பேர் மாருதி சுசுகி கிரான்ட் விட்ரா காரில் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 4.50 மணிக்கு உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி அருகே, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது.
பின் தொடர்ந்து வந்த பலினோ கார் டிரைவர், காரை நிறுத்திவிட்டு விபத்தை பார்வையிட்டார். பண்ருட்டியில் இருந்து சமயபுரம் நோக்கி சென்ற டொயோட்டா எட்டியாஸ் கார், பலினோ கார் பின்னால் வந்து நின்றது.
அப்போது, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற வேன், டொயோட்டா எட்டியாஸ் மற்றும் பலினோ கார் மீது அடுத்தடுத்து மோதியது.
இந்த விபத்தில் வேனில் வந்த சென்னை திருநின்றவூரை சேர்ந்த சிவா மகன் பிரபாகரன்,24; சென்னை அண்ணா நகர் கொடிராஜ் மனைவி அனுராதா,38; தங்கராஜ் மனைவி இந்தியாகு,60; கொடி செல்வம் மகன் சச்சின்,13; செல்லக்கண்ணு மகன் கொடியரசன்,30; ஆகிய ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்தினால், திருச்சி மார்க்க சாலையில் போக்குவரத்து பாதித்தது. உளுந்தூர்பேட்டை போலீசார், வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டு, போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.