ADDED : ஜூன் 22, 2024 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில் போலீசார் நடத்திய சோதனையில் சாராயம் விற்ற 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவது குறித்த தகவலின் பேரில், அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் மற்றும் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சாராயம் விற்ற வீரபாண்டி, ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கர் மனைவி உஷா, 44; மற்றும் ஆஞ்ச நேயர் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி நிர்மலா, 45; மயில்வேல் மனைவி பள்ளி, 45; பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில் முருகன் மனைவி ரங்கநாயகி, 42; ஆகியோரை கைது செய்து, தலா 10 லிட்டர் என மொத்தம் 40 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.