/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விதிமுறைகளை மீறிய 5 அரசு பஸ்களுக்கு அபராதம்
/
விதிமுறைகளை மீறிய 5 அரசு பஸ்களுக்கு அபராதம்
ADDED : மே 25, 2024 01:10 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் விதிமுறைகளை மீறிய 5 அரசு பஸ்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
உளுந்துார்பேட்டை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் அஷ்டமுத்து மற்றும் போலீசார் நேற்று காலை 11:00 மணியளவில் உளுந்துார்பேட்டை நகர் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசு பஸ்கள் விதிமுறைகளை மீறி ஒருவழிப் பாதையான உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் இருந்து நகர் மேம்பால பகுதி வழியாக உளுந்துார்பேட்டை நோக்கிச் சென்ற 5 அரசு பஸ்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும், உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் இருந்து நகர் மேம்பாலம் வழியாக செல்லும் பாதையில் விபத்துகள் ஏற்படுவதால் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
எனவே, விபத்துகளைத் தவிர்க்க விதிமுறைகளோடு பஸ்களை இயக்குமாறு போக்குவரத்து ஊழியர்களுக்கு, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

