sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீடு புகுந்து 57 சவரன் நகை கொள்ளை; மத்திய சிறைக்காவலர் உட்பட 6 பேர் கைது

/

வீடு புகுந்து 57 சவரன் நகை கொள்ளை; மத்திய சிறைக்காவலர் உட்பட 6 பேர் கைது

வீடு புகுந்து 57 சவரன் நகை கொள்ளை; மத்திய சிறைக்காவலர் உட்பட 6 பேர் கைது

வீடு புகுந்து 57 சவரன் நகை கொள்ளை; மத்திய சிறைக்காவலர் உட்பட 6 பேர் கைது


ADDED : ஜூன் 17, 2024 01:16 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 57 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில், கடலுார் மத்திய சிறை தலைமைக் காவலர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் அடுத்த தொப்பையாங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி ராஜாமணி, 70; கணவர் இறந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். கடந்த 10ம் தேதி உடல் நிலை சரியில்லாமல் இரவு அயர்ந்து துாங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்தபோது, வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு 57 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்து ராஜாமணி கொடுத்த புகாரில். திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

மேலும், எஸ்.பி., சமய்சிங் மீனா உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் திருநாவலுார் குமார், உளுந்துார்பேட்டை வீரமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடினர்.

அப்போது, உளுந்துார்பேட்டை அருகே கூ.நத்தம் பகுதியை சேர்ந்த கோபால் மகன் மாரிமுத்து, 31; சரவணபாக்கம் ரகு மகன் உதயா, 24; ஆகியோரை பிடித்து விசாரித்தில், அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் கூறிய தகவலின்பேரில் கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த சுதாகர், 32; நெய்வேலி அடுத்த செடுத்தான்குப்பம் கலியபெருமாள் மகன் சுபாஷ் சந்திரபோஸ், 25; விருத்தாசலம் தாஜூதீன் மகன் கபார்தீன், 23; கொத்தனுார் பஞ்சவர்ணம் மகன் மோகன்தாஸ் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டது, ராஜாமணியின் வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் ஞானமணி, 48; என்பவர் இருப்பது தெரியவந்தது. இவர், கடலுார் மத்திய சிறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார், கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஞானமணி, மாரிமுத்து, உதயா, சுதாகர், சுபாஷ் சந்திரபோஸ் கபார்தீன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மோகன்தாசை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 50 சவரன் நகைகள், 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், 3 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

அத்தை வீட்டிலேயே கை வைத்த காவலர்

இந்த திருட்டு சம்பத்திற்கு மூளையாக செயல்பட்ட கடலுார் மத்திய சிறை தலைமை காவலரான ஞானமணி, கஞ்சா வைத்திருந்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். பண தேவை ஏற்பட்டதால், சிறையில் இருந்த மாரிமுத்து உட்பட 6 பேரையும் தனது வீட்டின் எதிரில் உள்ள ராஜாமணி வீட்டில் திருட ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான ராஜாமணி, ஞானமணிக்கு அத்தை உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us