/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆவணங்களின்றி இயங்கிய 6 பள்ளி பஸ்கள் பறிமுதல்
/
ஆவணங்களின்றி இயங்கிய 6 பள்ளி பஸ்கள் பறிமுதல்
ADDED : செப் 11, 2024 02:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் முறையான ஆவணங்களின்றி இயங்கிய 6 தனியார் பள்ளி பஸ்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார்.
சங்கராபுரம் அடுத்த வடசேமபாளையத்தில் சக்கரா வித்யாலயா என்ற தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளி வாகனங்களை கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது பதிவு சான்று, ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் போன்ற முறையான ஆவணங்கள் இன்றி பள்ளி வாகனங்களை இயக்கியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 6 பள்ளி பள்களை பறிமுதல் செய்து சங்கராபுரம் போலீசில் ஒப்படைத்தார்.

