/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் பகுதியில் 60 விநாயகர் சிலைகள்
/
தியாகதுருகம் பகுதியில் 60 விநாயகர் சிலைகள்
ADDED : செப் 09, 2024 06:08 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் பகுதியில் 60 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தி விழா தியாகதுருகம் பகுதியில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. நகரில் முக்கிய இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
தியாகதுருகம் பேரூராட்சி மற்றும் இதற்கு உட்பட்ட புக்குளம், பெரிய மாம்பட்டு, உதயம் மாம்பட்டு, காந்திநகர் கஸ்தூரிபா நகர் ஆகிய இடங்களில் 20 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் சுற்றியுள்ள கிராமங்களிலும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து நேற்று பூஜை செய்தனர்.
இன்று விஜர்சன ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து பிரதிவிமங்கலம் பெரிய ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.