/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
6.5 லட்சம் பணம் மோசடி முதியவர் கைது
/
6.5 லட்சம் பணம் மோசடி முதியவர் கைது
ADDED : ஆக 16, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 6.5 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ராமச்சந்திரன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சபாநாயகம், 50; இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறிய கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த காபாகாந்தி, 66; என்பவரிடம் கடந்த 2022ம் ஆண்டு 6.5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
காபாகாந்தி கடந்த 2 ஆண்டுகளாக வேலை வாங்கித் தராமல் அலைகழித்து வந்ததுடன் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார்.
இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து காபாகாந்தியை கைது செய்தனர்.