/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த 35 நாட்களில் கள்ளக்குறிச்சி தொகுதியில் ரூ.68.36 லட்சம் பறிமுதல்
/
தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த 35 நாட்களில் கள்ளக்குறிச்சி தொகுதியில் ரூ.68.36 லட்சம் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த 35 நாட்களில் கள்ளக்குறிச்சி தொகுதியில் ரூ.68.36 லட்சம் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த 35 நாட்களில் கள்ளக்குறிச்சி தொகுதியில் ரூ.68.36 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 23, 2024 06:22 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் 68.36 லட்சம் ரூபாய், 12.72 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை ஆகியவற்றை பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் தேதி கடந்த மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தமிழகத்தில் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுபொருட்கள் வழங்குவதைத் தடுக்க பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டது.
பொதுமக்கள் உரிய ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் தினமும் சுழற்சி அடிப்படையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் பணம், நகை, அரசியல் தலைவர்களின் படம் மற்றும் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட ஆடைகள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதன்படி, கடந்த 19ம் தேதி வரை 35 நாட்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, கள்ளக்குறிச்சி (தனி) சட்டசபை தொகுதியில் 13 லட்சத்து 42 ஆயிரத்து 200 ரூபாய், ரிஷிவந்தியம் தொகுதியில் 4 லட்சத்து 74 ஆயிரத்து 250 ரூபாய், சங்கராபுரம் தொகுதியில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 300 ரூபாய் என மொத்தமாக 23 லட்சத்து 24 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்துார் (தனி) சட்டசபை தொகுதியில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 800 ரூபாய், கெங்கவல்லி (தனி) தொகுதியில் 19 லட்சத்து 5 ஆயிரத்து 605 ரூபாய், ஏற்காடு (எஸ்.டி.,) தொகுதியில் 23 லட்சத்து 29 ஆயிரத்து 690 ரூபாய் என மொத்தமாக 45 லட்சத்து 12 ஆயிரத்து 95 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் 13 ஆயிரத்து 300 மதிப்பிலான டி சர்ட், புடவை, கட்சி துண்டு, ஏற்காட்டில் 12 லட்சத்து 72 ஆயிரத்து 570 ரூபாய் மதிப்பிலான நகைகள், கெங்கவல்லியில் 1,540 ரூபாய் மதிப்புள்ள கட்சி கொடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதியில், மொத்தமாக 68 லட்சத்து 36 ஆயிரத்து 845 ரூபாயை பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
இவற்றில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால், 44 லட்சத்து 37 ஆயிரத்து 740 ரூபாய் அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏற்காட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளும் அதன் உரிமையாளிடம் முழுமையாக வழங்கப்பட்டது.

