/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆசிரியையிடம் 7 சவரன் நகை பறிப்பு உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்
/
ஆசிரியையிடம் 7 சவரன் நகை பறிப்பு உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்
ஆசிரியையிடம் 7 சவரன் நகை பறிப்பு உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்
ஆசிரியையிடம் 7 சவரன் நகை பறிப்பு உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்
ADDED : செப் 11, 2024 01:46 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 7 சவரன் நகையை பறித்து சென்ற ஹெல்மெட் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி அடுத்த முக்கூடல் பகுதியை சேர்ந்தவர் உலகநாதன் மனைவி அருள்தேவி, 54; ஆசிரியர். இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஆர்.ஆர்.குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
உளுந்துார்பேட்டை, தென்றல் நகரில் வசிக்கிறார். நேற்று காலை 8:35 மணியளவில் பள்ளிக்கு செல்வதற்காக உளுந்துார் பேட்டையில் இருந்து ஆர்.ஆர்.குப்பம் நோக்கி எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்றார்.
ஆர்.ஆர். குப்பம் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த ஆசாமி, ஆசிரியையின் ஸ்கூட்டர் மீது மோதுவது போல் சென்றார்.
சுதாரித்த ஆசிரியை அருள்தேவி, ஆர்.ஆர்.குப்பம் பகுதிக்கு வேகமாக ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றார்.
அவரைப் பின் தொடர்ந்து சென்று வழிமறித்த ஹெல்மெட் ஆசாமி, அருள்தேவி அணிந்திருந்த 7 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். பட்டப் பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை, இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.