ADDED : ஜூலை 14, 2026 05:22 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்களில் 76 வி.ஏ.ஓ.,க்களை பணியிட மாற்றம் செய்து ஆர்.டி.ஓ., உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை மற்றும் வாணாபுரம் ஆகிய 5 தாலுகாக்களில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,க்களுக்கு பணியிட மாற்றத்திற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்தது. இதில், ‘ஏ’ கிரேடு கிராமம் மற்றும் நகர்புறங்களில் ஓராண்டு பணிபுரிந்தவர்கள் மற்றும் ‘பி’ கிரேடு கிராமங்களில் மூன்றாண்டு பணி முடித்த வி.ஏ.ஓ.,க்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதில், கள்ளக்குறிச்சி தாலுகாவில் 23 வி.ஏ.ஓ.,க்கள், சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் தாலுக்காக்களில் தலா 15, வாணாபுரம் தாலுகாவில் 17 மற்றும் கல்வராயன்மலை தாலுகாவில் 6 என மொத்தமாக 76 வி.ஏ.ஓ.,க்களை பணியிட மாற்றம் செய்து, கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., முருகன் உத்தரவிட்டுள்ளார்.
