sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தேனீக்கள் கொட்டி 8 பேர் காயம்

/

தேனீக்கள் கொட்டி 8 பேர் காயம்

தேனீக்கள் கொட்டி 8 பேர் காயம்

தேனீக்கள் கொட்டி 8 பேர் காயம்


ADDED : செப் 08, 2024 06:45 AM

Google News

ADDED : செப் 08, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: பாவந்துார் காட்டுகொட்டாய் பகுதியில் தேனீக்கள் கடித்து 8 பேர் காயமடைந்தனர்.

ரிஷிவந்தியம் அடுத்த சாத்தப்புத்துாரைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 55; இவருக்கு சொந்தமான விளைநிலம் பாவந்துார் பகுதியில் உள்ளது. அண்ணாமலையும், அவரது மகன் பாலகிருஷ்ணனும் நேற்று காலை 9:00 மணியளவில் விளைநிலத்தில் உள்ள பருத்திக்கு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மரத்தில் இருந்த தேன் கூடு கலைந்து அதிலிருந்த தேனீக்கள் அண்ணாமலை, பாலகிருஷ்ணன் மற்றும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சங்கர் மகள் சஹாரா, 5; மகன் பிரதீப், 3; அவ்வழியாக சென்ற பாவந்துார் ஆரியமாலா, 52; முள்அரும்பு, 60; துாரி, 60; ஜெயக்கொடி, 40; ஆகியோரை கொட்டியது.

இதில் காயமடைந்த 8 பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தியாகதுருகம் ஒன்றிய சேர்மன் தாமோதரன், மாவட்ட பிரதிநிதி பெருமாள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் உடல்நலன் குறித்து கேட்டறிந்து, ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினர். டாக்டர்கள் நேரு, பழமலை, சுரேஷ் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us