/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிளாஸ்டிக் பொருட்கள் 800 கிலோ பறிமுதல்
/
பிளாஸ்டிக் பொருட்கள் 800 கிலோ பறிமுதல்
ADDED : பிப் 25, 2025 06:42 AM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் நகராட்சியில் தடை செய்யப்பட்ட 800 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
திருக்கோவிலுார் நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நகராட்சி கமிஷனர் திவ்யா தலைமையில் ஊழியர்கள் நகரப் பகுதிகளில் உள்ள கடைகளுக் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நகரப் பகுதி முழுதும் தடை செய்யப்பட்ட 800 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். 4 கடைகளுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் மொத்தம் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.