/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குட்கா விற்பனை 9 கடைகளுக்கு 'சீல்'
/
குட்கா விற்பனை 9 கடைகளுக்கு 'சீல்'
ADDED : ஆக 02, 2024 02:18 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் குட்கா விற்ற 9 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சின்னசேலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாகரன் மற்றும் சின்னசேலம் போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
அதில் பெரியசிறுவத்துார் நுார்முகமது, மூங்கில்பாடி பிரபாகரன், சின்னசேலம் சேலம் மெயின் ரோடு சந்திரா, வி.பி.அகரம் பாலமுருகன், மேல்நாரியப்பனுார் முனியன், சின்னசேலம் பாஸ்கரன், மணிகண்டன், திம்மாபுரம் முத்துசாமி, தொட்டியம் கணேசன் ஆகியோர் கடைகளில் குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதனையடுத்து கடையின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிந்து, 9 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.