/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் அருகே கார் தீப்பிடித்து நாசம்
/
சின்னசேலம் அருகே கார் தீப்பிடித்து நாசம்
ADDED : ஜூலை 23, 2024 09:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன், 48. ஆத்துாரில் இருந்து சின்னசேலம் நோக்கி, 'ரெனால்ட் கிவிட்' காரை நேற்று ஓட்டிச் சென்றார். காலை, 9:10 மணிக்கு, தலைவாசல் அருகே நத்தக்கரை சுங்கச்சாவடி பகுதியில், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, டீ கடைக்கு சென்றார். அப்போது காரின் இன்ஜின் பகுதியில் புகை எழுந்து தீப்பற்றி எரியத் துவங்கியது.
ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைப்பில் ஈடுபட்டனர். ஆனால், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.