/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் மீது வழக்குப் பதிவு
/
பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் மீது வழக்குப் பதிவு
பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் மீது வழக்குப் பதிவு
பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : மே 12, 2024 06:05 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வழிப்பறி, வாகன திருட்டு, விபத்து உள்ளிட்ட குற்ற சம்பவங்களைக் கண்காணிக்கும் பொருட்டு தினமும் போலீசார் ரோந்து செல்கின்றனர்.
அப்போது, பொது இடத்தில் மது அருந்தும் நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, நேற்று முன்தினம் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் 4 பேர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கீழ்குப்பம் ஆகிய காவல் நிலையங்களில் தலா 2 பேர், வரஞ்சரம் காவல் நிலையத்தில் ஒருவர் என மொத்தமாக 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.