/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு குடும்பத்தினர் மோதல் 5 பேர் மீது வழக்கு பதிவு
/
இரு குடும்பத்தினர் மோதல் 5 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 30, 2024 12:16 AM
கள்ளக்குறிச்சி: இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தானை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி லட்சுமி, 28; மாற்றுத்திறனாளியான இவர் தமிழக அரசால் வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவை அனுபவித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி மற்றும் சிலர் எப்படி பட்டா வாங்கினாய் என கேட்டு, லட்சுமியை அசிங்கமாக திட்டினர்.
இது குறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில் மண்ணாங்கட்டி மகன் தமிழ்மணி, அவரது மனைவி வசந்தி, ஸ்டாலின் மனைவி தாவாயி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
அதேபோல், லட்சுமியின் குழந்தைகள் அசுத்தம் செய்தது குறித்து கேட்டதற்கு தன்னை தாக்கியதாக வசந்தி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், பாவாடை மகன் வெங்டேசன், அவரது மனைவி லட்சுமி ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

