/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குட்கா வைத்திருந்தவர் மீது வழக்கு பதிவு
/
குட்கா வைத்திருந்தவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூன் 02, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: ரோடுமாமாந்துாரில் விற்பனைக்காக குட்கா வைத்திருந்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோடுமாமாந்துாரில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பாவாடை மகன் குமார் என்பவரது டீ கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. தொடர்ந்து, கடையில் இருந்த 15 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, குமார் மீது வழக்கு பதிந்தனர்.