ADDED : ஆக 31, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 7.42 மி.மீ., அளவு மழை பதிவாகிய நிலையில், மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. மழை அளவு மி.மீ., விபரம்:
கள்ளக்குறிச்சி 8, தியாகதுருகம் 22, கலையநல்லுார் 20, மணிமுக்தா அணை 11, பிள்ளையார்குப்பம் 23, யு.கீரனுார் 14, விருகாவூர் 5, கச்சிராயபாளையம் 3, கோமுகிஅணை 5, மூரார்பாளையம் 15, வடசிறுவள்ளூர் 8, கடுவனுார் மற்றும் மூங்கில்துறைப்பட்டில் தலா 7, அரியலுார் 6 மி.மீ., அளவு மழை பெய்தது. மாவட்டம் முழுதும் சராசரியாக 7.42 மி.மீ., மழை பதிவாகியது.
மாடு பலி
தியாகதுருகம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில், வடதொரசலுாரில் மின்னல் தாக்கியதில் சுப்ரமணி மனைவி ஜெயக்கொடி என்பவரது பசுமாடு இறந்தது.