/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுவில் விஷம் கலந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை
/
மதுவில் விஷம் கலந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை
மதுவில் விஷம் கலந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை
மதுவில் விஷம் கலந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை
ADDED : செப் 05, 2024 06:49 AM
கள்ளக்குறிச்சி : மதுவில் விஷமருந்து கலந்து குடித்த கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
பெரம்பலுார் மாவட்டம், வி.களத்துாரை சேர்ந்தவர் கலியன் மகன் செல்வம்,27; கூலித்தொழிலாளி. தாய், தந்தையை இழந்த செல்வம், சின்னசேலம் அடுத்த நைனார்பாளையத்தை சேர்ந்த அலமேலு என்பவரை திருமணம் செய்து, மாமனார் வீட்டிலேயே வசித்து வந்தார். செல்வத்திற்கு குடிப்பழக்கம் உள்ளது.
நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற செல்வம், மாலை 4 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு மனைவி அலமேலுவுடன் சண்டை போட்டிக்கொண்டிருந்த போது கணவன் செல்வத்தின் வாயில் நுரை தள்ளியுள்ளது. இது குறித்து கேட்டதற்கு மதுவில் விஷமருந்து கலந்து குடித்து விட்டதாக செல்வம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.