/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
/
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
ADDED : ஆக 20, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று கல்வராயன் மலையில் உள்ள துரூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் சாராய ரெய்டு சென்றனர்.
அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தப்பமுயன்ற நபர் அதே பகுதியை சேர்ந்த சவிக்கன் மகன் ராஜேந்திரன், 50; என்று தெரியவந்தது. மேலும் அவர் அரசு அனுமதி இல்லாத ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த கச்சிராயபாளையம் போலீசார் ராஜேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

