ADDED : ஆக 26, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பங்காரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக் ஓட்டி வந்த நபரை நிறுத்தும்படி சைகை காட்டினர்.
ஆனால், அந்த நபர், பைக்கில் கொண்டு வந்த மூட்டையை கீழே தள்ளிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார். போலீசார் மூட்டையை அவிழ்த்து பார்த்ததில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. உடன் அவற்றை பறிமுதல் செய்து, தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.