நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர்: வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மணலுார் பேட்டையில் மவுன ஊர்வலம் நடந்தது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவை முன்னிட்டு, மணலூர்பேட்டை வணிகர் சங்கம் சார்பில், கடைகள் மூடப்பட்டு, வணிகர்கள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடந்தது.
இதில் மணலூர்பேட்டை வர்த்தகர் சங்க தலைவர் அம்முரவிச்சந்திரன், கவுரவ தலைவர் சண்முகம், செயலாளர் அன்வர் பாஷா, சங்க பொருளாளர் அண்ணா துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.