/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது
/
அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது
ADDED : மே 03, 2024 05:37 AM

கள்ளக்குறிச்சி : அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
கல்வராயன்மலையில் நாட்டு துப்பாக்கிகளை கொண்டு வன விலங்குகளை வேட்டையாடுவதாக கரியாலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், தாழ்மொழிப்பட்டு கிராமத்தில் ராமசாமி மகன் செந்தில்குமார்,22; எருக்கம்பட்டு கிராமத்தில் வள்ளி மகன் தனபால் ஆகியோர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இருவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 ஒற்றை பேரல் நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், இதுதொடர்பாக போலீசார், வழக்கு பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர்.
தலைமறைவான தனபாலை தேடி வருகின்றனர்.