/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி
/
பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி
ADDED : செப் 16, 2024 06:41 AM
மூங்கில்துறைப்பட்டு பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து இறந்தார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடகீரனுாரை சேர்ந்த ஷர்புதீன் மகன் அமருல்லா, 25; இவரது நண்பர் இம்ரான், 28; இருவரும் மூங்கில்துறைப்பட்டில் உள்ள பிஸ்கெட் ஏஜென்சிஸ் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு இரவு 2 மணியளவில் பைக்கில் மேல்சிறுவளூர் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த அமருல்லா சம்பவ இடத்திலேயே இறந்தார். இம்ரான் கள்ளக்குறிச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.