sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரேஷன் அரிசி லோடு லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து

/

ரேஷன் அரிசி லோடு லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து

ரேஷன் அரிசி லோடு லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து

ரேஷன் அரிசி லோடு லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து


ADDED : ஜூன் 03, 2024 06:17 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : ஓடியந்தல் அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கள்ளக்குறிச்சி அடுத்த தேவபாண்டலத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகன் இளையராஜா, 45; லாரி டிரைவர். இவர், சங்கராபுரம் அரசு குடிமைப் பொருள் கிடங்கில் இருந்து நேற்று 200 ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கரையாம்பாளையம் நோக்கிச் சென்றார். லாரியில் மூட்டை துாக்கும் தொழிலாளர்கள் 3 பேர் இருந்தனர்.

மாலை 5:00 மணியளவில் வாணாபுரம் அடுத்த ஓடியந்தல் அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உட்பட 4 பேரும் காயமின்றி தப்பினர்.

தொடர்ந்து, அரிசி மூட்டைகள் மாற்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. ஜே.சி.பி., இயந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது.






      Dinamalar
      Follow us