/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சர்க்கரை லோடு லாரி கவிழ்ந்து விபத்து
/
சர்க்கரை லோடு லாரி கவிழ்ந்து விபத்து
ADDED : மே 17, 2024 10:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் புறவழிச் சாலையில் சர்க்கரை லோடு லாரி கவிழ்ந்த விபத்துக்குள்ளானது.
பண்ருட்டி அடுத்த கோழிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் இளையராஜா, 42; டாரஸ் லாரி டிரைவர். இவர், கடலுாரில் இருந்து சர்க்கரை லோடு ஏற்றிக் கொண்டு, பெங்களூரு சென்று கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1:40 மணியளவில் திருக்கோவிலுார் புறவழிச் சாலையில், டி.கே.மண்டபம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டு இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், டிரைவர் இளையராஜா லேசான காயங்களுடன் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திருக்கோவிலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

