/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைகேட்பு கூட்டத்தில் மொபைல் போனில் மூழ்கிய அரசு அலுவலர்கள் சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
/
குறைகேட்பு கூட்டத்தில் மொபைல் போனில் மூழ்கிய அரசு அலுவலர்கள் சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
குறைகேட்பு கூட்டத்தில் மொபைல் போனில் மூழ்கிய அரசு அலுவலர்கள் சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
குறைகேட்பு கூட்டத்தில் மொபைல் போனில் மூழ்கிய அரசு அலுவலர்கள் சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
ADDED : ஆக 06, 2024 06:50 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் அதிகாரிகள் மொபைல்போனில் மூழ்கியிருப்பது போன்று படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் அரசின் அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது நேரடியாக சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் அளிக்கும் கோரிக்கை மற்றும் புகார் மனுவிற்கு தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் வருகை புரிகின்றனர். மனு குறித்து பொதுமக்கள் முன்னிலையில் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் நேரடியாக கேட்டறிந்து விசாரிக்கும் போது, மனுவுக்கு விரைவாக தீர்வு கிடைத்துவிடம் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டு செல்கின்றனர்.
ஆனால், பொதுமக்கள் அளிக்கும் பெரும்பாலான மனுக்களுக்கு விரைவாக தீர்வு காணப்படுவதில்லை. இதனால் மனு அளிப்பது தொடர்ந்து நடக்கிறது.
நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கைத்தறி, கைவினை பொருட்கள் ஜவுளி மற்றும் காதித் துறை அரசு முதன்மை செயலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் பிரசாந்த் செல்ல நேரிட்டதால் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமையில் கூட்டம் நடந்தது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தபோது, அதனை கண்டுகொள்ளாத அரசு துறை அலுவலர்கள் பலர் தங்களது மொபைல் போனில் வாட்ஸ் ஆப், யூ டியூப், பேஸ்புக் பார்த்தும், மொபைலில் பேசியபடியும் இருந்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. மொபைலில் மூழ்கிய அரசு துறை அலுவலர்களின் அலட்சிய போக்கு பொதுமக்களை விரக்தியடையச் செய்துள்ளது.