ADDED : ஆக 28, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : சிறுவங்கூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரை சேர்ந்தவர் இளங்கோ, 61. இவர் நேற்று முன்தினம் காலை அதே கிராமத்தை சேர்ந்த முருகேசப்பிள்ளை மகன் அன்பழகன் என்பவரது கூரை வீட்டினை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து இளங்கோ மீது விழுந்தது. படு காயமடைந்த அவர், இறந்தார்.
கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.